பிராங்க் வீடியோ எடுக்கும் தனியார் youtube சேனல் மீது வழக்கு : கோவை போலீசார் அதிரடி..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் கோவையில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் முதியோரின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுப்பவர்களை மாநகர சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கோவை 360 டிகிரி என்ற தனியார் யூடியூப் சேனல் நடத்தி வரும் நபர்கள் பொதுமக்களின் சம்மதம் இன்றி பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். எனவே அந்த youtube சேனல் மீது மாநகர சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உக்கடம் பெரியகுளம் பூங்கா, வ.உ.சி மைதானம் உள்ளிட்ட இடங்களில் பிராங்க் வீடியோ எடுக்கப்படுகிறது என்று காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.