சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் வழங்க செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்த நிலையில் இன்று இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Leave a Reply