கோவையில் கூலித் தொலிலாளி கத்தியால் குத்திக் கொலை – அதிகாலை நடந்த சம்பவத்தால் பரபரப்பு 

கோவையில் கூலித் தொலிலாளி கத்தியால் குத்திக் கொலை – அதிகாலை நடந்த சம்பவத்தால் பரபரப்பு 

மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ஜெய்கணேஷ் 35 வயதான இவர் கோவை துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெய்கணேசை கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெய்கணேஷ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் ஜெய்கணேசின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். அதிகாலை நடந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.