காட்டு மாடு தாக்கிய கூலி தொழிலாளி படுகாயம்: சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!

காட்டு மாடு தாக்கிய கூலி தொழிலாளி படுகாயம்: சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் காபி முட்டைகளுடன் வீட்டுக்கு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த காட்டு மாடு அவரை தாக்கியது. இதில் அவருக்கு அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடியவரை அருகில் இருந்த புனித அக்யூனாஸ் பள்ளி நிறுவனர்கள் பாக்யராஜ், உதயகுமார், வினோத், ஜோசப், தம்பி ராமச்சந்திரன் ஆகியோர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இரவில் காட்டு மாடு நடமாட்டத்தை பொருள்படுத்தாமல் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அவர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.