தஞ்சாவூரை சேர்ந்த பிரபல ரெளடி ராஜாவுக்கு மரண தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜா என்ற கட்ட ராஜா மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்த நிலையில், கைது செய்யப்பட்டு கும்பகோணம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி இன்று காலை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை தீர்ப்பை வாசித்த நீதிபதி, ரெளடி ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Leave a Reply