மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் திருநாவுக்கரசர் MP

திருச்சி புனித வளனாா் கல்லூரியில் வணிகவியல் துறையின் 50-ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவா் விழா மலரை வெளியிட்டு மேலும் பேசியதாவது                                                                                                      குடும்ப சூழல், பொருளாதார நிலை உள்ளிட்டவை வாழ்க்கையை நிா்ணயிப்பதில்லை. முயற்சிதான் நிா்ணயிக்கிறது. உழைக்காத யாரும் முன்னேறவே முடியாது, உழைப்புதான் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது.வணிகவியல் துறை மாணவா்களுக்கு உள்நாடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் நல்ல வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்திக் கொண்டு மாணவா்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சாதனைகள் புரிய வேண்டும் என்றாா்.நிகழ்வில் மற்றுமொரு சிறப்பு அழைப்பாளரும், இக்கல்லூரி முன்னாள் மாணவரும், ஆா்பிஐ வங்கியின் கடன் இழப்பு கட்டமைப்பு வெளிவிவகாரக்குழு மேனாள் தலைவா் ஆா். நாராயணசுவாமி, கல்லூரி அதிபா் பவுல்ராஜ் மைக்கேல், செயலாளா் கே. அமல், முதல்வா் எம். ஆரோக்கியசாமி சேவியா், வணிகவியல்துறைத் தலைவா் அலெக்சாண்டா் பிரவின் துரை உள்ளிட்டோரும் பேசினா். நிகழ்வில் விழா மலா் மற்றும் கையேடுகள் விநியோகிக்கப்பட்டன. ஏராளமான பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். திருச்சி செய்தியாளர் H. பஷீர்