காஷ்மீர் மோதல்.. இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்… மோடியை வர சொல்லுங்கள் …பாகிஸ்தான் பிரதமர் தூது..!

ஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சு வார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடியை உடனடியாக வர சொல்லுமாறு ஐக்கிய அரபு அமீரகத்திடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ள ஷெபாஸ் ஷெரீப், முறைப்படி பாகிஸ்தானிடம் காஷ்மீரை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி, எப்போது திவாலாக போகிறோம் என தெரியாமல் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதமருக்கு இதுபோன்ற பேச்சுகள் தேவைதானா என சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்பி வருகின்றன.

பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டில் எங்கு பார்த்தாலும் பட்டினியும், பஞ்சமும் தலைவிரித்தாடி வருகிறது. பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவுப்பொருளான கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை அந்நாடு இறக்குமதி செய்து வருகிறது. இதனிடையே, கையில் உள்ள மொத்த அந்நிய செலாவணியும் தீர்ந்து போயிருக்கும் நிலையில் இன்னும் இரண்டே வாரத்தில் பாகிஸ்தான் திவாலாகும் என சர்வதேச நிதி அமைப்புகள் கணித்துள்ளன. உணவுக்காக மக்கள் வீதியில் இறங்கி சண்டையிட்டு வருகிறார்கள்.

பாகிஸ்தானின் நிலைமை இவ்வாறு இருக்க, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீபோ அதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்தியாவை வம்புக்கு இழுத்து வருகிறார். இதுதொடர்பாக அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அவர் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர், “காஷ்மீர் விவகாரம் அனலாக கொதித்துக் கொண்டிருக்கிறது. இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி காஷ்மீரை பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா இன்னும் அலட்சியப்போக்கில் செயல்பட்டால் இரு நாடுகள் இடையே அணு ஆயுத போர் கூட ஏற்படலாம். இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள். ஒருவேளை, ஏதாவது விபரீதமாக நடந்துவிட்டால், என்ன நிகழ்ந்தது என்பதை சொல்ல கூட யாரும் இருக்க மாட்டோம். எனவே, காஷ்மீர் விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய அரபு அமீரகம் அழைத்து வர வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் இந்த பேச்சினை உலக நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. “பாகிஸ்தானின் நிலைமையே இன்னும் ஒருசில நாட்களில் என்னவாகும் என்பது தெரியவில்லை. இரண்டு வேளை கூட உணவு இல்லாமல் அந்நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழலில் இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை கேட்டு பாகிஸ்தான் பிரதமர் அடம்பிடிக்கிறார். இதை என்ன சொல்வதென்று தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் பிரச்சினையை திசைதிருப்ப அவர் இவ்வாறு பேசி வருகிறாரா என்பதும் தெரியவில்லை” என அமெரிக்கா பொருளாதார வல்லுநர் வில்லியமஸ் தெரிவித்தார்.