வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று- ஜிம் ஜாங் போட்ட அதிரடி உத்தரவு.!!

உலகம் முழுவதும் கொரோனா கோர தண்டவம் ஆடியபோதும், வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என அந்நாடு தெரிவித்துவந்தது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லைகளை உடனடியாக மூடியதுடன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது இதற்கு காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் வடகொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கை வடகொரியா அதிபர் ஜிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.