கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில்,தனியார் வில்லாவில் வசிப்பவர் கலைச்செல்வி (வயது 38) இவர் வருமானவரித்துறை துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.இவரது வீட்டில் படுக்கை அறையில் புதிதாக மர அலமாரி செய்வதற்கு அளவு எடுப்பதற்கு 2 தச்சு தொழிலாளர்கள் நேற்று வந்திருந்தனர். அவர்கள் அளவு எடுத்து விட்டு சென்ற போது பீரோவில் வைத்திருந்த கலைச்செல்வியின் தாயாரின் 3 பவுன் வளையல்களை காணவில்லை.அலமாரி அளவு எடுக்க வந்த தச்சு தொழிலாளர்கள் தான் அதை திருடியிருப்பதாக சந்தேகிக்கபடுகிறது .இது குறித்து கலைச்செல்வி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Leave a Reply