ஜப்பான் பிரதமரின் முதல் இந்தியப் பயணம்: மோடி கொடுத்த அன்பு பரிசு-என்னன்னு தெரியணுமா..? உள்ளே போய் பாருங்க…

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷியாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தனமரத்தில் செய்யப்பட்ட ‘கிருஷ்ண பங்கி’ எனும் கலைப்பொருளைப் பரிசாக அளித்தார்.

இதன் முனைகளில் சிறிய பாரம்பரிய மணிகள் உள்ளன. காற்றின் திசைக்கேற்ப அவை அசையும். மேலும் திறப்பிடங்கள் போலவும் அதில் செதுக்கப்பட்டுள்ளது. அதில் அன்பு மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தும் கிருஷ்ணரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இந்தியா-ஜப்பான் இடையிலான 14-வது மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இந்தியா வந்தார். ஜப்பானின் பிரதமராகக் கடந்தாண்டு அக்டோபரில் பதவியேற்ற பிறகு, கிஷிடா இந்தியாவுக்கு வருகை தந்தது இதுவே முதல்முறை.

இந்தியா வந்த கிஷிடாவுக்கு பிரதமர் மோடி சந்தனமரத்தில் செய்யப்பட்ட கிருஷ்ண பங்கி எனும் கலைப்பொருளைப் பரிசாக அளித்துள்ளார்.

ராஜஸ்தானில் செய்யப்பட்ட இந்த கலைப்பொருளின் விவரங்கள் குறித்து தகவலறிந்த அரசுத் தரப்பு வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதன்படி, பங்கி என்பது பாரம்பரிய சாதனங்களைக் கொண்டு நுட்பமாக செதுக்கக்கூடியது. அதன் மேல் கைகளால் செதுக்கப்பட்ட தேசியப் பறவை மயிலின் உருவம் உள்ளது.