சிறைவாசிகளின் எண்ணிக்கையை குறைக்க சிறை அதாலத் நிகழ்ச்சி-வீடியோ இணைப்பு.!!

புழல், மத்திய சிறை-2ல் சிறையினுள் சிறைவாசிகளின் எண்ணிக்கையினை குறைத்திடும் பொருட்டு சிறைவாசிகளுக்கு சிறை அதாலத் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற  நீதியரசர் / தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு கௌரவ செயல் தலைவர் S. வைத்தியநாதன் தலைமையிலும், சென்னை உயர்நீதிமன்ற  நீதியரசர்  S.M. சுப்பிரமணியம் முன்னிலையிலும் இன்று (26.08.2023) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்புனர் செயலர் நசீர் அகமத் பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் முதன்மை அமர்வு நீதிபதி S. செல்வ சுந்தரி , காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் முதன்மை அமர்வு நீதிபதி J. மாவிஸ் தீபிகா சுந்தரவதனா, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் R. தமிழ் செல்வி மற்றும் நீதிபதி.சுதா மேலும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை முதன்மை நடுவர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நீதிமன்ற நடுவர்கள் கலந்து கொண்டார்கள்.

 

சிறை – அதாலத் மூலம் பிணையில் செல்ல இயலாமல் சிறையில் இருக்கும் சிறு வழக்குகளில் ஈடுபட்ட சிறைவாசியின் வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு சிறையில் இருந்த நாட்களை தண்டனை காலமாக கருதி விடுதலை செய்யப்படுவார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன், சிறைக்கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கண்காணிப்பாளர், மத்திய சிறை-1 மற்றும் இரா.கிருஷ்ணராஜ், கண்காணிப்பாளர், மத்திய சிறை-2 ஆகியோர் கலந்து கொண்டனர்..