தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதத்தை கேட்ட பின்னர் பேசிய நீதிபதிகள், அமைதியான வழயில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அனுமதியின்றி போராட்டம் நடத்துவது சட்ட விரோதம். அதேவேளை், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும், இது கவலைக்குரியது.
அனைத்தையும் முடக்கி பொதுமக்களுக்கு எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாமல் செய்யக்கூடாது. மெட்ரோ மற்றும் பிற ரயில் சேவைகளை முறைப்படுத்தப்பட்ட முறையில் இயக்குவது குறித்து உரிய முடிவை எடுக்க வேண்டும், நகரின் ஒரு சாலை முடக்கப்பட்டால் மாற்றுப் பாதை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரத்தை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.







