உக்ரைன் மக்களை ஆவியாக்கும் குண்டுகள் வீச ரஷ்யா திட்டமா..?

மனிதர்களை ஆவியாகும் குண்டுகளை உக்ரைன் மீது வீச ரஷியா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கொடூரமான போர் நடைபெற்று வருகிறது என்பது உக்ரைனின் பல பகுதிகளை ரஷியா கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் மனிதர்களை ஆவியாகும் ராக்கெட் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா வீச இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஒரு சில இடங்களில் இந்த குண்டுகள் வீசப்பட்டதாகவும், அப்போது தரையில் இருந்த பொருட்கள் பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது

மனிதர்களை ஆவியாகும் குண்டுகள் மிகுந்த ஆபத்தானவை என்றும் இந்த குண்டுகள் வெடிக்கும் போது ஒரு பெரிய தீப்பந்தம் உருவாகி அந்த பகுதியில் இருக்கும் மனிதர்கள் உள்பட அனைத்துப் பொருள்களும் ஆவிஆகிவிடும் என்று கூறப்படுவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.