பாஜகவில் இணைய போகிறாரா கங்குலி..?-ட்விட்டரில் பதிவு.!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டாடா என செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரரான கங்குலி கடந்த 2019 ஆம் ஆண்டு அகடோபர் மாதம் பிசிசிஐ யின் தலைவராக பொறுப்பேற்றார்.

ஆரம்பத்தில் கங்குலி பிசிசிஐ தலைவரானதை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள், நாட்கள் செல்ல செல்ல, கங்குலியின் செயல்களால் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அதாவது கங்குலியின் தலையீட்டால் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்த்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதே போன்று பிசிசிஐ தந்த அழுத்தத்தால் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக, பிறகு ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலகினார். இதனால் கங்குலி மீது கோலி ரசிகர்கள் கடும் கோபமடைந்து டிவிட்டரில் விமர்சனம் செய்தனர்.

சமீப காலமாகவே கங்குலி அரசியலில் இறங்க போவதாக செய்திகள் அதிகமாக வெளிவந்து கொண்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கூட மத்திய அமைச்சர் அமித்ஷா கங்குலியின் வீட்டிற்கு இரவு உணவிற்காக சென்று இருந்தார். அது அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைக்காக என பேச்சுக்கள் எழுந்தது, அதனை மறுத்த கங்குலி அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா, உடன் பணியாற்றுவதால் இது நட்பு அடிப்படையிலான சந்திப்பே எனக் கூறி இருந்தார்.

இந்த நிலையில் தான் கங்குலி தனது ட்விட்டரில் ஒரு பதிவை இட்டு உள்ளார், அதில், கிரிக்கெட் உலகிற்கு நான் வந்து இதோடு 30 வருடம் ஆகிறது. 30 வருடங்களில் எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதற்காக நான் இன்று ஒரு விஷயத்தை துவங்க போகிறேன்.நான் துவங்கும் விஷயம் பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் புதிய அத்தியாயத்திற்கு உங்களின் ஆதரவு தேவை என்று கங்குலி ரசிகர்களுக்கு கோரிக்கை வித்து இருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலக போகிறாரா? புதிய முயற்சி என்றால் பாஜகவில் இணைய போகிறாரா? அல்லது வேறு ஏதேனும் கட்சியில் இணையப்போகிறா? என பெரிய விவாதமே செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆனால், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, கங்குலி ராஜினாமா செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். பின்னர் ஏன் இப்படி ஒரு பதிவு.. வெறும் விளம்பர உத்தியா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் நெட்டிசன்கள்.

கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், கங்கலியை இழுக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அப்போது அவருக்கு உடல் நலம் குன்றியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியிலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும் சில மாநிலங்களில் முதல்வர் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக கங்குலி அரசியலில் இணைந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை…