அணு ஆயுதங்கள் தயாரிப்பது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் மோதலில் இருந்து வந்த நிலையில், பிப்ரவரி 28, 2026 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை மிக கடுமையாக தாக்கி வருகிறது. தொடர் தாக்குதல்கள் காரணமாக ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொலல்லப்பட்டார். இந்த சம்பவம் ஈரானில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்கு ஈரான் பழிவாங்கும் வகையில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு பிறகு ஈரானின் உட்சபட்ச தலைவராக 56 வயதான முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக புதிய உட்சபட்ச தலைவர் முஜ்தபா கமேனியும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை ஈரான் ஊடகங்கள் ரமலான் போர் என அழைக்கின்றன. இந்த நிலையில், புதிய உட்சபட்ச தலைவரை ரமலான் போரில் காயமடைந்த வீரர் என்று அழைப்பதன் மூலம் அவர் தற்போதைய மோதலில் காயமடைந்திருப்பதை அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டதாகவே தெரிகிறது என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் புதிய உட்சபட்ச தலைவர் காயம்..?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதியதாக பதவி ஏற்றுள்ள ஈரானின் புதிய உட்சபட்ச தலைவர் முஜ்தபா கமேனியும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், ஈரானின் புதிய உட்சபட்ச தலைவர் காயமடைந்துள்ளது குறித்து வெளியாகியுள்ள தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.








