பம்பை அடித்து இசைக்கு அழகாக ஒயிலாட்டம் ஆடி கலைஞர்களை உற்சாகபடுத்திய கோவை கலெக்டர் சமீரன்..!!

கோவைமாவட்டம் கணியூர் அருகே வேட்டைக்காரன் குட்டை பகுதியில் சங்கமம் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், 75வது சுதந்திர ஆண்டு அமுதா பெரு விழாவை முன்னிட்டும் இந்த அரங்கேற்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஒயிலாட்ட நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் ஆகியோர் நடனமாடினர்.

அப்போது நடனத்தை ரசித்த ஆட்சியர் சமீரன், ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து அங்கு பம்பை அடித்துக்கொண்டிருந்தவரிடம் பம்பையை வாங்கி அடித்தும், நடனக்கலைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்ட நடனம் ஆடியும் கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.