புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்வது, 47 சதவீதம் குறைந்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம், உலக நாடுகளின் ஆயுதக் கொள்முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில், இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, 21 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், 2017 – 21ல், உலகின் மொத்த ஆயுத இறக்குமதியில், 11 சதவீத பங்களிப்புடன், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.இந்தியாவின் ரஷ்ய ஆயுத இறக்குமதி, 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில், 69 சதவீதத்தில் இருந்து, 47 சதவீதமாக குறைந்துள்ளது. அதே சமயம், 2017 – 21ல், பிரான்சில் இருந்து ராணுவ தளவாட இறக்குமதி, 10 மடங்கு அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.அடுத்த இடங்களில், சீனா, எகிப்து ஆகியவை உள்ளன. இந்தியா உள்நாட்டில் ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது. இதனால், ரஷ்யாவிலிருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்வது குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply