சச்சின் டெண்டுல்கரின் தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்திய இந்திய அஞ்சல் துறை..!

ச்சின் டெண்டுல்கர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். அவருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் பல சாதனைகளை செய்ய வைத்துள்ளது.

ஆரம்பத்தில் அவர் ஒரு பவுலராக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது தான், அவருக்கு பந்து வீச்சு சரியில்லை என்று கூறி ரமாகாந்த் அச்ரேகர் அவரை பேட்டிங் பயிற்சி எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தான் ரஞ்சி டிராபி, துலிப் ராணி, இராணி டிராபி, தியோதர் டிராபி என்று விளையாடி அதன் பிறகு இந்திய அணிக்காக விளையாடினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான விமர்சனங்களை கடந்து தான் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றும் அளவிற்கு எண்ணற்ற சாதனைகளை சச்சின் படைத்துள்ளார். முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், 200 போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 248 ரன்கள் (நாட் அவுட்).

இதில், 51 சதங்களும், 68 அரைசதங்களும் அடங்கும். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி தனது 200ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். சச்சின் டெண்டுல்கரின் 200ஆவது டெஸ்ட் போட்டியின் நினைவாக இந்திய தபால் துறை தபால் தலை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியது. அதோடு, சிறப்பு மினியேச்சர்களும் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி அமைதியின் சிகரமாக விளங்கிய அன்னை தெரசாவிற்கு அடுத்தபடியாக இவருக்கு தான் தபால் தலை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1994 – அர்ஜூனா விருது – விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசு அவருக்கு அர்ஜூனா விருது வழங்கியது.

1997-98 – கேல் ரத்னா விருது – விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

1999 – பத்ம ஸ்ரீ – இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

2001 – மகாராஷ்டிரா பூஷன் விருது – மகாராஷ்டிரா மாநிலத்தின் உயரிய விருது

2008 – பத்ம விபூஷன் விருது – இந்தியாவின் 2ஆவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

2014 – பாரத ரத்னா – இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஹாக்கியின் மறைந்த வீரர் தியான் சந்த்திற்கு வழங்க வேண்டிய விருதை மாற்றி சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கியதாக இந்த விருதின் தேர்வு முறை குறித்த சர்ச்சைகளை ஏற்படுத்தியதாக அப்போது விமர்சனம் எழுந்தது.