வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு இந்தியா குரல் கொடுக்கும் – பிரதமர் மோடி உறுதி..!

இந்தோனேசியா: வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கும்… டிசம்பர் 1 முதல் ஜி 20 கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்க உள்ள இந்தியா வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டின் இறுதியில் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, உற்பத்திச் சங்கிலியில் கவனம், தொற்று நோய்கள், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ளுதல் போன்றவற்றில் வளரும் நாடுகளுடன் இந்தியா தோளோடு தோள் கொடுத்து நிற்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்பதன் மூலம் உலகின் வலிமை வாய்ந்த பொருளாதார நாடுகளை ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்