சீனாவில் கொரொனா பரவல் அதிகரிப்பு-மீண்டும் ஊரடங்கு அமல்.!!

கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இதில், பல நாடுகளில் உயிரிழப்புகள் பல லட்சம் மக்கள் கொரொனா தோற்றால் பாதிப்பு அடைந்தனர்.

2021 ஆம் ஆண்டு கொரொனா இரண்டாவது அலை பரவியது, 2022 ஆம் ஆண்டு கொரொனாவின் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவிய நிலையில், அக்டோபரில் 4 வது அலை பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவின் சாங்சுன் உள்ளிட்ட வடகிழக்குப் நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனாவால் 255 பேர் பலியாகையுள்ளதாகவும் அந்த நகரில் மொத்தம் 4,194 பேர் ஒரே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியான நிலையில், 90 லட்சம் பேர் கொண்ட மாகாணத்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.