ஒரே வீட்டில்.. ஒரே சேலையில்… தூக்கில் தொங்கிய காதல் ஜோடி.. அதிர்ச்சி சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த காதலன் அதே சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உமா கௌரி. 20 வயதான இப்பெண்ணின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நாகர்கோயில் அமைந்துள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்து வரும் இவர், மருங்கூரை சேர்ந்த 24 வயதான வேணு மோகன் என்ற இளைஞரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர் நாகர்கோவிலில் உள்ள மருத்துவ ஆய்வக நிறுவனத்தில் டிப்ளமோ படித்து வந்தார். இவர்களது காதலுக்கு வேணுமோகனின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், உமா கௌரியின் தாயார் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய போது மகள் உமா கௌரியும் காதலன் வேணு மோகனும் வீட்டில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் கதறி அழவே, கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியதோடு, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உமாகவுரியும், வேணுமோகனும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு ஒருந்துள்ளது. இதனால் உமாகவுரி குடும்பத்தினர் நாகர்கோவிலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். நாகர்கோவிலுக்கு வந்த பிறகும் வேணுமோகன் உமாகவுரியுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

ஒரே சேலையில் தற்கொலை

இந்த நிலையில் வேணுமோகன், உமாகவுரியிடம் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து வேணு மோகன் நாகர்கோவிலில் உள்ள உமாகவுரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் வேணுமோகன் உமா கவுரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த உமாகவுரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த வேணுகோபாலும் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.;