ரஷ்யாவா போற இம்ரான் கான்.. பாகிஸ்தான் வங்கிக்கு பல கோடி அபராதம்.. அமெரிக்கா வச்ச பெரிய ஆப்பு.!!

நியூயார்க்: உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்றுவரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யா சென்றார். இந்நிலையில், பாகிஸ்தான் வங்கிக்கு 55 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இருந்து பிரிந்து வந்து உக்ரைன் தனி நாடானது. தன்னை ஐரோப்பிய நாடாக கருதிய உக்ரைன், நேட்டோ நாடுகளில் இணைய விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.

நேட்டோ நாடுகளின் சபையில் உக்ரைன் இணைந்தால் மேற்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிக்கும், இதனால் ரஷ்யாவுக்கு ஆபத்தாகும் என கருதியது.

ரஷ்யாவில் போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ரஷ்யாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்த‌ ரஷ்ய அதிகாரி ஒருவரிடம் இம்ரான் கான் “என்ன ஒரு நேரத்தில் நான் வந்துள்ளேன். மிகவும் கிளர்ச்சியூட்டுகிறது” என்று கூறினார். இந்த உரையாடலின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதனால் இம்ரான் கானுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மாஸ்கோ பயணத்திற்கு அமெரிக்கா பதிலளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது ஒவ்வொரு “பொறுப்பான” நாட்டின் கடமையாகும் என பாகிஸ்தான் பிரதமரை இந்த போர் விவகாரத்தில் அமெரிக்கா சாடியுள்ளது. மேலும் உக்ரைன் ரஷ்யா போரில் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் பாகிஸ்தானிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. 23 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்யா சென்றிருக்கிறார். ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் மறைமுக ஆதரவாகவே இதை நேட்டோ நாடுகள் கருதுகின்றன. இந்நிலையில் நியூயார்க்கில் இருக்கும் ‘நேஷனல் பேங்க் ஆப் பாகிஸ்தான்’ (பால்கிஸ்தான் தேசிய வங்கி) கிளைக்கு அமெரிக்க நிறுவனங்கள் 55 மில்லியன் அமெரிக்க டாலரை அபராதமாக விதித்துள்ளன.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 20.4 மில்லியன் அமெரிக்க டாலரும் மற்றும் நியூயார்க் மாநிலத்தின் நிதிச் சேவைகளின் கண்காணிப்பு அமைப்பு 35 மில்லியன் அமெரிக்க டாலரை பாகிஸ்தான் தேசிய வங்கிக்கு இந்த அபராதமாக விதித்துள்ளன. வங்கி சட்டத்தை மீறியதற்காகவும் வங்கி ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 10 நாட்களுக்குள் ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும், 60 நாட்களுக்குள் இந்த அபராதத்தைக் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.