சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இம்முறையும் இது கட்டாயம் ..!

பரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து போலீசாருக்கு சின்னம்மை தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.