சிவகங்கை மாவட்டம் கோதமங்கலத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி .இவரது மகன் ஹரி பிரசாத் ( வயது 19) குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.( ஐ.டி) படித்து வருகிறார். இவர் பி. கே. புதூரில்நண்பர்களுடன் தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.நேற்றுஅதே விடுதியில் தங்கி படிக்கும் பெரம்பலூரை சேர்ந்த தனுஷ் (வயது 21) சேலம் நேரு நகரை சேர்ந்த அஜய் (வயது 22)ஆகியோர் ஹரி பிரசாத்திடம் செலவுக்குபணம் கேட்டதாக கூறப்டுகிறது .அவர் கொடுக்க மறுத்தார்.இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து ஹரிப்பிரசத்தை தாக்கி, கத்தியால் குத்தினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர்கள்தனுஷ், அஜய் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இவர்கள் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
Leave a Reply