இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை மாநகர்.! விமான நிலையத்தில் காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடக்கம்.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது.

தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

இதேபோல் சென்னை விமான நிலையத்திலும் மழைநீர் சூழ்ந்த நிலையில், இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. இன்று காலை 9 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. விமான ஓடுதளத்தில் தேங்கிய மழைநீர் வடிந்ததை தொடர்ந்து மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. இருப்பினும் மிக குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இன்றும் 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.