அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சியே கவிழ்ந்து விடும்- அண்ணாமலை கொடுத்த ஷாக்..!

அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியது தான் தி.மு.க. அரசின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அரசு இந்த திமுக அரசு. மக்கள் தான், இந்த விடியா அரசை கேள்வி கேட்க வேண்டும். மத்திய அரசு சொல்லித் தான் விலை உயர்வு செய்ததாக, பொய் சொல்கின்றனர். மத்திய அரசு மீது பழி போடுவது மட்டுமே மாநில அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தினமும் விலை உயர்த்துவது பற்றி மட்டுகே முதல்வர் யோசித்துக் கொண்டிருக்கிறாரோ என தோன்றுகிறது. ஆட்சி செய்யத் தெரியாத, மனசாட்சி இல்லாத மாநில அரசின் கையில் மாட்டிக் கொண்டு உள்ளோம். தி.மு.க.,வின் மெத்தனமும், போலீசாரின் செயல் இன்மையும் தான் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காரணம். பா.ஜ.க நடவடிக்கையால் தான், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடக்கிறது. சம்பவம் நடந்த பின், 4 நாட்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எஸ்கேப் ஆகி விட்டார். பா.ஜ.க மீது பழி போடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் என்பதால், போலி பாஸ்போர்ட் ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை, ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். அமைச்சர்களை சொந்த ஊருக்குள் அனுமதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வினர் இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.