தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வித் தரத்தையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 38 மாவட்டங்களிலும் உள்ள எந்தவொரு பள்ளிக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தாம் எந்நேரமும் திடீர் ஆய்வுக்கு வரக்கூடும் என்றும், இதனை ஒரு எச்சரிக்கையாகப் பார்க்காமல் மாணவர்களின் எதிர்காலத்திற்கான கூட்டுப் பொறுப்புணர்வாக எடுத்துக்கொண்டு ஆசிரியர்களும் அதிகாரிகளும் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ‘முன்கூட்டியே தகவல் கூறாமல் எந்த பள்ளிக்கும் எப்போதும் வருவேன்’ தயாராக இருங்கள் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‘நான் ஒரு அமைச்சராக இல்லாமல், சகோதரனாக சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கூடத்திலும் எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஆய்வு செய்ய வருவேன். இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு பொறுப்புணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அனைத்து அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும், தலைமை ஆசியர்கள் உள்பட அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டு பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும்.மாணவர்களின் எதிர்காலத்தை நாம் தீர்மாணிக்கின்ற இடத்தில் இருக்கிறோம். அப்போ, ஆய்வுக்கு சொல்லிவிட்டு வருவதால் அல்லது சம்பரதாயத்திற்கு வருவதாக இருக்க கூடாது. அதனால், 38 மாவட்டங்களுக்கும் எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்வோம். எல்லா நேரத்திலும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டு பொறுப்புணர்ச்சி என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டிக் கொள்கிறேன்.’ என்று கூறினார்.








