குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில், 40 வயதான பெண் ஒருவர் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து, தன் கணவர் ஒரு பெண் என்பதையும், அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.
இதுகுறித்து கோத்ரி காவல் நிலையத்தில் மனைவி ஷீதல் கொடுத்த புகாரில், கணவர் விராஜ் வர்தன் (விஜய்தா) தன்னிடம் இயல்புக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபட்டதாகவும் (Unnatural Sex) தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கணவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரை அடுத்து அவரின் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஷீடல், விராஜ் வர்தன் ஆகியோர் மேட்ரிமோனி இணையதளம் மூலம் கடந்த ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகியுள்ளனர் என்றும் இது ஷீடலுக்கு இரண்டாவது திருமணம் என்றும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரின் முதல் கணவர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும், அப்போது அவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் ஷீடல் – விராஜ் வர்தன் ஆகியோருக்கு திருமணம் ஆகியுள்ளது. அவர்கள் ஹனிமூனுக்கு காஷ்மீர்ல சென்றுள்ளனர். இருப்பினும், விராஜ் திருமண வாழ்வில் முறையாக ஈடுபடவில்லை. நீண்ட நாள்களாக ஷீடலிடம் சாக்குபோக்கு சொல்லியுள்ளார்.
அவருக்கு ஷீடல் மிகவும் அழுத்தம் கொடுத்ததை அடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் ரஷ்யாவில் இருந்தபோது, ஒரு விபத்தால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தன்னால் உடலுறவில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார். ஆனால், தான் சிறு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் முழுமையாக குணமடைந்துவிடுவேன் என ஷீடலுக்கு விராஜ் நம்பிக்கை அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கடந்த 2020 ஜனவரி மாதம், உடல் பருமன் காரணமான தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என விராஜ் ஷீடலிடம் தெரிவித்த விராஜ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அதன்பின்னர், நீண்ட நாள்கள் கழித்து அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போதுதான், அவர் உடல் பருமனுக்காக அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றும், அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் ஷீடலுக்கு தெரியவந்தது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு, ஷீடலுடன் இயல்புக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபட்டதாகவும், உண்மையை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஷீடலை மிரட்டியுள்ளார்.
திருமணாகி 8 ஆண்டுகளாக, ஆணாக நடித்த விராஜ் வர்தன் (முன்னர் விஜயதா), பின்னர் சமீபத்தில் ஆணாக மாறுவதற்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. ஷீடல் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, டெல்லியில் இருந்த விராஜ் வர்தனை, வதோதராவுக்கு அழைத்து வரப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply