மகா சிவராத்திரி சிவபெருமானின் பூரண அருளை பெறும் நாள் என்பதால் விரத முறையில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்.
மகா சிவராத்திரி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்றைய நாளில் ஒருமுறை ஆகாரம் மேற்கொண்டு பின்னர் உபவாசமாய் இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும். நாள் முழுவதும் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் சமைத்த உணவை உண்ணாமல் பால், பழங்களை உண்டு பசியாறலாம்.
அதிகாலையே எழுந்து குளித்து, வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து சிவபெருமான் படம் அல்லது விக்ரஹம் முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். வழிபடும்போது “நமச்சிவாய” மந்திரத்தை உச்சரிக்கலாம். அல்லது திருவாசகம், தேவாரம் உள்ளிட்டவற்றில் உள்ள பதிகங்களை பாடி பூஜை செய்யலாம்.
முக்கியமாக தேவாரத்தில் உள்ள திருக்கேதீச்சர பதிகம், திருவண்ணாமலை பதிகங்களை பாடுவது மகா சிவராத்திரி வழிபாட்டிற்கு கூடுதல் சிறப்பை தரும்.
மலைக்கு மேல் சிவபெருமான் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ இரவு முழுவதும் கண்விழித்து சிவ மந்திரங்களை உச்சரித்து வழிபடலாம். அதிகாலை 4 மணிக்கு கால பூஜைகள் முடிந்த பின் ஆகாரம் மேற்கொள்ளலாம்.
Leave a Reply