திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் கோர விபத்து.. அடுத்தடுத்து மோதிய 3 கார்கள்.. சம்பவ இடத்தில் 4 பெண்கள் பரிதாப பலி..

திருச்சி: திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரின் டயர் வெடித்ததில், கார் வேகமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார்கள் மீது மோதியது.

இந்த விபத்தில், கார்களில் வந்த 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதன் பின்னர் விபத்து தொடர்பாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடம் வந்த அதிகாரிகள், காருக்குள் சிக்கிய குழந்தைகளை, கார் கண்ணாடிகளை உடைத்து மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 2 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.