கோவையில் காரில் மறைத்து வைத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பெண்கள், டிரைவர் கைது..!

கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா குமாரி, சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் நேற்று இரவு ரத்தினபுரி நாராயணசாமி வீதியில் உள்ள சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் காரில் கஞ்சா வியாபாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரை சோதனை செய்த போது அதில் 1950 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளை காருக்குள் மறைத்து வைத்து கல்லூரி மாணவர்களுக்கு ரகசியமாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக காரில் இருந்த ரத்தினபுரி, மேஸ்திரி பழனியப்ப கவுண்டர் விதியை சேர்ந்த மோனிஷா (வயது 21)தேவி ஸ்ரீ (வயது 28 )பத்மாவதி ( வயது 45) நல்லாம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்த டிரைவர் சூரிய பிரகாஷ் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பத்மா பியூட்டிஷியனாக வேலை பார்த்து வருகிறார் .சூரிய பிரகாஷ் டிரைவராக உள்ளார்.மோனிஷா பிரபல கஞ்சா வியாபாரி கவுதம் மனைவி ஆவாள் .இவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் ,1,950 கிராம் கஞ்சா ‘பணம் ரூ.4500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.