ஹய்யா! நான் பாஸ் ஆயிட்டேன்… 87 வயதில் 10-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி…ஹரியானாவின் முன்னாள் முதல்வருக்கு குவியும் பாராட்டுக்கள்.!!

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் இந்திய தேசிய லோக் தள கட்சித் தலைவர்.

கடந்த 2017-ம் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருந்தார் சவுதாலா. அங்கிருந்தபடியே 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு எழுதினார். ஆனால் ஆங்கில பாடத் தேர்வை மட்டும் எழுதவில்லை. அதனால், சவுதாலா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வையும் எழுதியபோதும் அதன் முடிவை அரியானா பள்ளிக் கல்வி வாரியம் நிறுத்திவைத்துவிட்டது. பின்னர் இதற்கிடையே நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் 10-ம் வகுப்புத் தேர்வில் அவர் தேர்ச்சி பெறாததால் அவருக்கு வழங்க வேண்டிய 12-ம் வகுப்பிற்காக சான்றிதழ் நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பின் ஆங்கிலப் படத்தை மீண்டும் எழுதி 100-க்கு 88 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் தற்போது ஹரியானா மாநிலக் கல்வி அதிகாரிகள் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்ச்சி சான்றிதழை ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு வழங்கினர். 87 வயதான நிலையிலும் ‘படிப்பதற்கு வயது தடையில்லை’ என்று படித்து தேர்ச்சி பெற்ற ஓம் பிரகாஷ் சவுதாலாவை அரசியல் தலைவர்கள் மற்றும் வலைதளப்பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.