அடேங்கப்பா!! கோவை – திருச்சூர் பேருந்து பயணியின் ஆடைகளில் பல்வேறு இடங்களில் “ரகசிய அறைகள்” – கட்டுக், கட்டாக பணம்.!!!

யார் அந்த நபர், எந்த கட்சியை சேர்ந்தவர் என்று இன்னும் முழுமையாக விவரம் தெரியவில்லை. கேரள மாநில போலீசாரே அதிர்ந்து போயி இருக்கிறார்கள்.
மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு, கடந்த 19 ந் தேதி தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நிலையில், பிற மாநிலங்களிலும் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன.

அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருக்கிறது. இந்த காலக் கட்டத்தில் ரொக்கமாக 50000 பணத்திற்கு மேல் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அதுபோலவே, மதுபாட்டிகளை பெட்டி பெட்டியாக எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தங்கத்தையும் மொத்தமாக எடுத்து செல்ல தடை அமலில் உள்ளது. பரிசு பொருட்கள், பண விநியோகத்தை தடுக்கவும் போலீசார் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.

கேரளா மாநிலத்தில் வரும் 26 ம் தேதி பொதுத் தேர்தல் நடக்க போகிறது. எனவே, தமிழக, கேரள எல்லையான வளையார் சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கேரளா போலீசார் செக்போஸ்ட்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, கோவையில் இருந்து திருச்சூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அந்த தனியார் பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த பயணிகள் இடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு நபரின் மீது அதிகம் சந்தேகம் கொண்ட போலீசார், அவரை முழுமையாக பரிசோதித்தனர். அதிலும் அவர் உடுத்தி இருந்த ஆடை வித்தியாசமாக இருந்தது.

அந்த ஆடைகளில் பல்வேறு இடங்களில் நிறைய “ரகசிய அறைகள்” இருந்தன. அவை ஒவ்வொன்றிலும், கட்டுக் கட்டாக பணம் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

மொத்த பணத்தையும் வெளியே எடுக்குமாறு போலீசார் அந்த நபரிடம் சொன்னார்கள்.. அவரும் ஆடையிலில் பல இடங்களில் இருந்து கட்டுக் கட்டாக பணத்தை வெளியே எடுத்தார். அவர் ஒவ்வொரு இடமாக பணத்தை மறைத்து வைத்து இருந்ததை பார்த்து போலீசாரே அதிர்ந்து போனார்கள். இந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவுமே இல்லை.

ரூ.14 லட்சத்து 20 ஆயிரத்தை ஆடைக்குள் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.. சம்பந்தப்பட்ட 40 வயது நபர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ என்பது தெரியவந்து உள்ளது.