குடிநீருக்காக குடியிருப்புக்குள் உலா வரும் யானை, காட்டெருமை கூட்டம்- மலை கிராம மக்கள் அச்சம் ..! க உலா வருவதனால் மலை கிராம மக்கள் பீதி

கோவை ஆனைக்கட்டி , தடாகம் ஒட்டிய வன பகுதிகளில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் சில நேரம் வன ஒட்டிய பகுதிக்களுக்கும், மலைவாழ் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் தாக்கமும், இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் என இரு வேறு கால நிலைகள் இருப்பதால் பகல் நேரங்களில் குடிநீருக்காக வன விலங்குகள் அருகிலுள்ள கிராமப் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் மனித – மிருக மோதல் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் மலை அடிவாரத்தில் யானை , காட்டெருமைகள் குடிநீர் தேடி கிராமங்களுக்கு படையெடுத்து இருக்கின்ற நிலையிலே மக்கள் அச்சம் அடைந்து இருக்கின்றன. தடாகம் பள்ளத்தாக்கு, மாங்கரை பகுதிகளில் யானை, காட்டெருமைகள் தண்ணீர் பருக படையெடுத்து வருக்கின்றன. உணவை தேடி, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதி அருகே உள்ள ஓடை , ஆறுகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் வன விலங்கு நடமாடும் பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இயருக்கின்றனர்.

மேலும் வனத்துறையினர் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அனைத்து தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே வனவிலங்குகள் ஊருக்குள் உலா வராமல் இருக்கும் என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நிலையில் தமிழக – கேரளா எல்லையான ஆனைகட்டி பகுதியில் அங்கே இருக்கின்ற ஓடையில் தண்ணீர் அருந்திக் கொண்டு இருக்கும் யானை மற்றும் அந்த நீரை தேடி வரும் காட்டு மாடுகள் ஆகியவற்றை செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது வயிறு ஆகி வருகிறது.