உலகிலேயே மிகவும் பாதுகாப்பான கார் “கார்டிலாக் 1” பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா .. இதோ உங்களுக்கான சில சுவாரஸ்ய தகவல்கள்.!!!

உலகத்தில் மிகவும் பாதுகாப்பான ஒரு காரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்காவில் உள்ள பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்டிலாக் 1 என்ற கார் தான் உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான கார் ஆகும்.

இந்த காரில் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் இருக்கிறது. இந்த காரின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் துப்பாக்கி குண்டுகள் ஊடுருவ முடியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் விலை 1.5 மில்லியன் டாலர்ஸ் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 10 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இந்த காரில் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கிறது. இந்த கார் தனியாக எந்த ஒரு இடத்திற்கும் செல்லாது. இந்த கார் செல்லும் போது அதே மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள போலியான 50 கார்கள் உடன் செல்லும். இந்த கார் அமெரிக்கா‌ நாட்டின் ஜனாதிபதிக்காக உருவாக்கப்பட்டுள்ளது.