இலங்கையில் சீனா நிறுவனத்துடன் செயல்படுத்த இருந்த மின் உற்பத்தி திட்டங்களை இந்தியா கைப்பற்றியது.!!

டெல்லி: இலங்கையில் சீனா செயல்படுத்த இருந்த மின் உற்பத்தி திட்டங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா- இலங்கை இடையே கையெழுத்தானது.

பிம்ஸ்டெக் எனப்படும் வங்கக்கடல் பகுதி நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள 3 தீவுகளில் மின்னுற்பத்தி நிலையங்களை இந்தியா அமைத்து தருவது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க சீனாவிற்கு இலங்கை கடந்த ஆண்டு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழகத்தின் எல்லையிலிருந்து எல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்து சீனா கால் பதிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அபாயம் என இலங்கையிடம் இந்தியா கவலை தெரிவித்திருந்தது.

மேலும் மின்னுற்பத்தி திட்டங்களை தாமே செயல்படுத்தி தரவும் இந்தியா முன்வந்தது. இந்த யோசனையை இலங்கை ஏற்றுக்கொண்ட நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்னதாகா கொழும்புவில் பேசிய சீன தூதர் தங்களுக்கு வழங்கப்பட இருந்த வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கியது குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். கொழும்பு அருகே போர்ட்சிட்டியில் சீனாவிற்கு நில உரிமை தரும் முடிவையும் இலங்கை ஏற்கனவே திரும்ப பெற்றிருந்தது.