அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டனவா..? என அடுக்கடுக்கான 4 கேள்விகள்.. இபிஎஸ் விரிவான பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டனவா என்பன உள்ளிட்ட 4 கேள்விகளுக்கு பதில் விரிவான விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொதுக் குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்தார். இவரது மனு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு என காரசாரமாக விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஓபிஎஸ் தரப்பு முன் வைத்த முக்கிய பாயிண்ட்- பொதுக் குழு கூடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பே அழைப்பிதழ்கள் அனுப்ப வேண்டும். ஆனால் நான் வழக்கு தொடர்வதற்கு ஒரு நாள் முன்னர்தான் எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது என சொல்லப்பட்டது.

அதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11 இல் கூட்ட போவதாக சொல்லும் பொதுக் குழு முந்தைய பொதுக்குழுவின் நீட்சியா இல்லை வேறு பொதுக் குழுவா என நீதிபதி கேட்டார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஜூலை 11 இல் கூட்டவுள்ளது சிறப்பு பொதுக் குழு. இந்த பொதுக் குழுவை கூட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரோ இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை.

பொதுக் குழுவை ஒரு வாரத்திற்கு வழக்கை தள்ளி வைக்கலாம் ஆனால் பொதுக் குழுவுக்கு விதிக்கக் கூடாது என வாதிட்டது. இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எடப்பாடி பழனிச்சாமிக்கு 4 கேள்விகளை கேட்டுள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டனவா?

தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக் குழுவை கூட்ட அதிகாரம் இருக்கிறதா, அப்படியெனில் பொதுக் குழு நோட்டீஸில் யார் கையெழுத்திடுவது , எத்தனை நாட்களுக்கு முன்பு பொதுக் குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார். இந்த கேள்விகளுக்கு அதிமுக, இபிஎஸ் தரப்பு விரிவான பதிலை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை நாளை மதியத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுமா என்பது நாளை தெரியவரும்.