ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… மீண்டும் தலையணை, போர்வை வழங்க உத்தரவு.!!

புதுடில்லி: மீண்டும் அனுமதி…கொரோனா பரவலை தடுப்பதற்காக ரயில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்குவதற்கு தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் சிரமத்தை தவிர்ப்பதற்காக தலையணை மற்றும் போர்வை பெறும் வசதி ரயில்வே நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்து போர்வை மற்றும் தலையணையை பயணிகள் பெற்றுவந்தனர். இடையே கொரோனா தொற்று காரணமாக இந்த வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துவிட்டதால் ரயிலில் குளிர்சாதன வசதியுள்ள பெட்டியில் (AC வகுப்பு) பயணிகளுக்கு மீண்டும் பழைய முறைப்படி போர்வை, தலையணை வழங்க வேண்டுமென ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.