சென்னை: அடுத்த மாதம் மதுரையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நீர்வளத்துறை துரைமுருகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
2022-23- ம் ஆண்டுக்கான நிதிவருவாய் உள்ளிட்ட விசயங்கள் குறித்தும் கூட இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. வரிவருவாய் ஈட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் அடுத்தகட்டமான மாநில வருவாய் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் வரி உயர்வு காரணமாக பல பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் எடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறுவவதால், அதன் ஏற்பாடுகள் மற்றும் மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டிய விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுளள்து.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது 28-ம் தேடி தொடங்க உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாகவும் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார். செஸ் ஒலிம்பியாடுக்காக மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பரங்களும், அனிமேஷன் புகைப்படங்கள், பிரோமோ பாடல்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இதன் தொடக்கவிழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்து ஆலோனை மேற்கொண்டுள்ளார்.
Leave a Reply