வரும் 22ம் தேதி கோவையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்..!

கோவை: நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து
கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கோவை மாவட்ட அனைத்து எண்ணை நிறுவன மேலாளர்கள்(இந்தியன் ஆயில்
கார்ப்பரேசன்,பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன்), எரிவாயு முகவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொள்ளும் மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் 22-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வு தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.