கோவையில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

கோவையில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

அரசு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் ஆசிரியர் கழகம்தினார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கோவை ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து இயற்பியல் ஆசிரியர் பால் குழந்தை ராஜ் வயது 53 என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பள்ளி மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் அளித்ததாக தெரிகிறது உடனடியாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். ஆசிரியர் பால் குழந்தை ராஜ் பல மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆசிரியர் பால் குழந்தை ராஜ் மீது காருண்யா நகர் போலீசாரிடம் புகார் அளித்தனர். பின்னர் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோரின் விசாரணை அறிக்கையின் படி முதற்கட்டமாக  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி  ஆசிரியரை  தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்