வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை வழங்கும் குட்வில் செயின்ட் லூசியா யூனிவர்சிட்டி உடன் ஒப்பந்தம்

புதுச்சேரி வெங்கடா சுப்பா சாலையில் குட்வில் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உலகில் பல்வேறு நாடுகளில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டும் உள்ளது. இந்த வகையில் தற்போது கரீபியன் பகுதியில் உள்ள செயின்ட் லூசியா நாட்டில் செயல்படும் ஸ்பார்தன் ஹெல்த் சயின்சஸ் யுனிவர்சிட்டியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக்கழக இந்திய நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ராஜசேகர் கூடியதாவது அமெரிக்காவில் மருத்துவம் படிப்பதற்கு முன்பு ஆங்கில மொழி திறன் திறனிற்கான தேர்வு மற்றும் நீட் போன்ற தகுதி தேர்வு ஒன்றையும் எழுத வேண்டும். இதற்கு மூன்று ஆண்டுகள் வரை காலம் ஆகும் அதன் பின்னர் ஐந்தரை ஆண்டுகள் இளநிலை மருத்துவம் படிக்க வேண்டும். இவைகளுக்கு ரூபாய் 3 கோடி வரை செலவு ஆகும். அதே சமயம் அமெரிக்காவின் காலனி நாடாக இருந்த செயின்ட் லூசியா நாட்டிலும் கல்வியில் அமெரிக்க முறையே பின்பற்றப்படுகிறது. ஆனால் அங்கு பயில முன் தேர்வுகள் ஏதும் கிடையாது. ஆனால் நமது நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் ஐந்தே முக்கால் ஆண்டுகள் படிப்பதற்கு ரூபாய் 60 லட்சம் வரை செலவு ஏற்படும். அதன் பின்னர் சுலபமாக அமெரிக்காவில் மேல்படிப்புக்கு சென்று விடலாம் அமெரிக்காவில் மருத்துவ மேற்படிப்பிற்கு கட்டணம் கிடையாது. அங்கே பயிலும் போது உதவி தொகையுடன் கிடைக்கும் இந்த ஆண்டு 68 இந்திய மாணவர்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். அதில் 14 பேர் புதுவை தமிழகத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நன்றாக இருக்கும் இந்திய வகை உணவுகளையே மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம். கல்வி பயில்வதே மருத்துவம் என்பதால் மருத்துவ உதவியும் கிடைக்கும் எங்கள் பல்கலைக்கழகம் 43 ஆண்டுகளாக உள்ளது. கரீபியன் பகுதியில் வசிப்பவர்கள் நீக்ரோ கிடையாது. இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் எனவே அவர்கள் இந்திய மாணவர்கள் மீது
பற்றுள்ளவர்களாகவே நடந்து கொள்வார்கள் இதற்கு விமான மூலம் சென்னையில் இருந்து நெதர்லாந்து பின்னர் நெதர்லாந்தில் இருந்து போர்ட் ஆப் ஸ்பெயின் அதன் பின்னர் லூசியா நாட்டிற்கு செல்லலாம் பயணம் 2 நாட்கள் ஆகும் அமெரிக்காவில் நேரடியாக படிக்க முடியாத சூழல் உள்ளதால் இங்கு படித்து உயர்கல்வியை அமெரிக்காவில் படித்து நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார். பேட்டி யின்போது தமிழக நிர்வாக இயக்குனர் பாலமுருகன் குட்வில் நிறுவன மேலாளர் விஸ்வா கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்..