கோவை பாப்பநாயக்கன்பாளையம்லட்சுமண புரத்தைச் சேர்ந்தவர்சோமசுந்தரம் இவரது மனைவி சரஸ்வதி ( வயது 64)இவரது கணவர் சோமசுந்தரம் 2020 ஆண்டு இறந்துவிட்டார் .இவருக்கு 2மகள்கள் உள்ளனர். இவர்கள் அமெரிக்கா, லண்டனில் வசித்து வருகிறார்கள்.இதனால் சரஸ்வதி தனியாக வசிக்க விருப்பமில்லாமல் காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.இந்த நிலையில் பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமணபுரத்தில் உள்ள அவரது வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5பவுன் நகைகள்- வெள்ளி குத்து விளக்கு வெள்ளி டம்ளர் ஆகியவற்றை காணவில்லை. யாரோ கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ 3லட்சம் இருக்கும் .இதுகுறித்து சரஸ்வதி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார், இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply