கோவையில் ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது.!!

கோவை சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று நீலிகோணாம்பாளையம் அருகே பஸ் நிறுத்தத்தில் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சுதாகரனிடம் பணம் கேட்டு மிரட்டினார். பின்னர் திடீரென அவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.350-யை பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்தி முனையில் பணம் பறித்து சென்றது நீலிகோணாம்பாளையம் தச்சன் தோட்டம் கிழக்கு வீதியை சேர்ந்த மோகனசுந்தரம் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.