ஆட்டை கொன்ற விவகாரம்: மூன்று ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை – கையில் அல்வாவுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு 

ஆட்டை கொன்ற விவகாரம்: மூன்று ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை – கையில் அல்வாவுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு 

கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது 12 ஆடுகளை இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த செந்தில்,பழனியப்பன், பாண்டியன் ஆகியோர் விஷம் வைத்து கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார். இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் அல்வாவுடன் வித்தியாசமான முறையில் வந்து மனு அளித்தார்.

எனது புகார் தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்காமல் கடந்த மூன்று ஆண்டுகளாக அலைக் கழிக்கப்படுவதாகவும் எனது ஆடுகளை திருப்பி அளித்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறிய அவர் மூன்று வருடங்களாக எனது புகாரை விசாரிக்காமல் அல்வா கொடுத்தவர்களுக்கு தற்போது அல்வா கொடுக்கவே அல்வாவை எடுத்து வந்ததாக அவர் தெரிவித்தார்