இந்தியாவில் முதன் முறையாக இ20 பெட்ரோலை ஜியோ-பிபி நிறுவனம் சில்லறை விற்பனையைக் குறிப்பிட்ட பங்க்களில் துவங்கியுள்ளது.இந்த பெட்ரால் விலை மற்ற பெட்ரோலை விடக் குறைவாக இருக்கும்.
எதிர்காலத்தில் இது லிட்டர் ரூ60க்கும் விற்பனையாகும் என கூறப்படுகிறது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.
இந்தியா தனது பெட்ரோல் தேவைக்காக வெளிநாடுகளையே சார்ந்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து இந்தியாவில் அதிலிருந்த பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றைப் பிரித்தெடுத்து இந்தியாவிற்குள் விற்பனை செய்யவும் இந்தியாவைச் சுற்றியுள்ள சிறிய சிறிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் பெட்ரோலுக்கான தேவையைக் குறைக்கவும் வெளிநாடுகளை நாம் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இதைக் கொள்கையாகக் கொண்டு எடுத்துள்ளது. இப்படி எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை தான் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பது.
பெட்ரோலை போல எத்தனாலும் ஒரு எரிபொருள் தான். இதுவும் வாகனம் இயங்க உதவும். இதைத் தயாரிக்க வெளிநாடுகளின் உதவி தேவையில்லை. ஆனால் இந்தியாவின் பெட்ரோல் தேவைக்கு நிகராக எத்தனால் உற்பத்தியை தற்போது செய்ய முடியாது. இதனால் மத்திய அரசு பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கும் முயற்சியைக் கடந்த 2014ம் ஆண்டு முதல் எடுத்து வருகிறது.
முதலில் வெறும் 1.5 சதவீதமாக இருந்த எத்தனால் கலப்படம் தற்போது 10 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. இந்தியா அடுத்த ஒரு சில ஆண்டுகளுக்குள் 20 சதவீத இலக்கை எட்டி பிடிக்கும் என எதிர்பார்க்கிறது. இதையடுத்து இந்திய அரசு அடுத்த சில ஆண்டுகளில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை மட்டுமே விற்பனை செய்யும் என அறிவித்துவிட்டது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இந்தியா முழுவதும் தற்போது விற்பனையாகும் பெட்ரோல் அளவில் 20 சதவீதம் எத்தனாலை கலப்பது மூலம் இந்தியாவிற்கு ஆண்டிற்கு ரூ 54,894 கோடி பணம் மிச்சமாகிறது. இது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை வெறும் 10 சதவீதம் குறைப்பது மூலம் நடக்கிறது.
20 சதவீத எத்தனால் கலப்பது மூலம் பெட்ரோல் விலை குறையும். இதன் பிறகும் பெட்ரோலில் தொடர்ந்து எத்தனால் அளவை அதிகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு திட்டப்படி எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டர் ரூ60க்கு கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வேகமாக நடந்தால் பெட்ரோல் விலை மிக வேகமாகக் குறையும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் இந்தியாவில் முதல் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் நிறுவனமாக ஜியோ-பிபி நிறுவனம் மாறியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் கூட்டு சேர்த்து ரிலையன் பிபி மொபிலிட்டி என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
இந்த கூட்டு நிறுவனம் சார்பில் இந்தியாவில் ஜியோ பிபி என்ற சில்லறை வர்த்தக பெட்ரோல் பம்ப்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பம்ப்களில் குறிப்பிட்டவற்றில் மட்டும் முதன் முறையாக 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலின் விற்பனையைத் துவங்கியுள்ளது. தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் படி வாகனங்களைத் தயாரிக்கத் துவங்கிவிட்டனர்.
இதன் மூலம் தற்போது உள்ள பெட்ரோல் விலையை விட எத்தனால் கலந்த பெட்ரோல் விலை சற்று குறைவாக இருக்கும். இந்த எத்தனால் கலந்த இ-20 வகை பெட்ரோலை பயன்படுத்துவது மூலம் மாசு வெகுவாக குறையும். எத்தனால் எரிவது மூலம் மாசு இல்லாமல் இருக்கும். இதனால் தான் அரசு இந்த எத்தனால் கலப்பை ஆதரிக்கிறது. அரசு எத்தனால் கலப்பை 2025ம் ஆண்டு இந்தியா முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் இந்த பெட்ரோல் மட்டுமே கிடைக்க வேண்டும் என் நிலையை உருவாக்க முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் பிபி நிறுவனம் இதை அமல்படுத்தும் முதல் நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியா முழுவதும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள குறிப்பிட்ட பங்க்களில் இதன் விற்பனையைத் துவங்கியுள்ளது
Leave a Reply