கோவையில் கஞ்சா, போதைப் பொருட்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும்- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கருத்தரங்க கட்டிடத்தில் மாதாந்திர குற்ற தடுப்பு கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-கோவையில் கடந்த ஒரு மாதமாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா குட்கா ,புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.இதற்காக மாநகர காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்.கஞ்சா போதை பொருட்கள் அறவே இல்லாத மாநகரமாக கோவை திகழ வேண்டும்.எனவே மேலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.சீட்டாட்டம், விபச்சாரம், லாட்டரி, நடத்துபவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.அதேபோல குறித்த நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும்.பணியில் முழு கவனம் செலுத்துவது போல உடலை கவனிப்பதிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.காவல் நிலையத்தில் தேங்கியுள்ள வழக்குகளுக்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து விரைந்து முடிக்க வேண்டும்.முடித்தால் மட்டும் போதாது வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் பெற்றுக் கொடுக்க வேண்டும்.இரவு ரோந்து பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.