கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம், பழனி ஆண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 59) இவர் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் .இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று அவர் கண்ணம்பாளையத்தில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இது குறித்து அவரது மனைவி சத்யா சூலூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.