கோவை வந்த கேரள நகை வியாபாரிகளை வழிமறித்து ரூ.4 லட்சம் கொள்ளையடித்த கும்பல் கைது..!

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கூட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரோகித் ( வயது 25) பரத் (வயது 25) நகை வியாபாரிகள். இவர்கள் 2பேரும் கடந்த மாதம் தங்க நகைகளுடன் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் அந்த நகைகளை கோவை ராஜவீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்தனர். அதன் மூலம் கிடைத்த ரூ 4லட்சத்துடன் மோட்டார் சைக்கிளில் பாலக்காடு திரும்பி கொண்டிருந்தனர். வேலாந்தவளம் ரோட்டில் உள்ள பிச்சனூர் அருகே சென்றபோது திடீரென்று ஒரு கார் அவர்கள் 2 பேரையும் வழிமறித்தது அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அத்துடன் காரில் இருந்து 3 பேர் இறங்கினார்கள். அவர்கள் 6பேரும் சேர்ந்து ரோகித், பாரத்’ ஆகியோரிடம் இருந்து ரூ. 4 லட்சத்தை மிரட்டி கொள்ளடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது .அவர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வந்தனர் அதில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த ரஞ்சித் (வயது 22) அபினேஷ் ( வயது 27) ரஞ்சித் குமார் ( வயது 32) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் கொழிஞ்சாம்பாறை சென்று அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர் .அதில் நகை வியாபாரிகளை தாக்கி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர் .இதை யடுத்து போலீசார் ரஞ்சித், அபினேஷ், ரஞ்சித் குமார், ஆகியோரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்..இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.