தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய ஒருநாள் பாதிப்பு 2,972- ஆக உயர்ந்த. சென்னையில் ஒருநாள் பாதிப்பு 1072 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 1-ம் தேதி ஆலோசனை நடத்தினார். இதனால், மக்கள் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே தற்போது உள்ள கொரோனா பெரிதாக உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சாதாரன பிரச்சனைகளே ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் கொரோனாவின் தீவிரத்தை தற்போது காண முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். எனினும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு அல்லது ஞாயிறு முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி, இரவு 10 மணிக்கு மேல் மக்கள் நடமாட தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வரக்கூடும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply